கொவிட் புதுவருட கொத்தணியில் காவு கொள்ளப்பட்ட 8,166 உயிர்கள் - மூன்றாவது அலையால் திணறும் இலங்கை
srilanka
covid19
corona
death
peoples
By S P Thas
இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதார தரப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தொற்றினால் நேற்று முன் தினம் 192 பேர் உயிரிழந்திருந்ததாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,166ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் மொத்தமாக 8,775 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றின் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்திருந்ததாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மூன்றாவது அலை காரணமாக 8,166 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி