வவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா!
Covid-19
Corona Virus
Vavuniya
By Vasanth
வவுனியாவில் மேலும் 13 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று வெளியாகியது. இதனடிப்படையில் வவுனியாவின் நகரப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் தனிமைப்படுத்தப்பட்ட 13 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.
இன்று அடையாளம் காணப்பட்ட நபர்களுடன், கடந்த ஒருமாத காலப்பகுதியில் வவுனியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 301ஆக அதிகரித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி