இலங்கையில் மேலும் 671 பேருக்கு கொரோனா
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 527,735 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று வெளிவந்த அறிக்கையின் படி, நேற்று 23 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர். இதன்படி, இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,337 ஆக அதிகரித்துள்ளது.