நடிகை மீனா உட்பட ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொரோனா
                    
                corona
            
                    
                family
            
                    
                actormeena
            
            
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போதைய மூன்றாவது அலையில் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், பிரபல நடிகை மீனாவின் குடும்பமும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தம்மை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், '2022ல் எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கொரோனா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். பொறுப்பாக இருங்கள். இந்த வைரசை பரவ விடாதீர்கள். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என  கூறி உள்ளார்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்