இலங்கையில் அமுலாகும் கடுமையான கட்டுப்பாடுகள்? - வெளியாகியுள்ள முக்கிய தகவல்
curfew
srilanka
covid19
corona
mahinda
By S P Thas
கொவிட் தொற்று வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த விரைவில் அரசாங்கத்தால் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்க வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முடக்கப்பட்டால் அது நாளாந்தம் பணி செய்பவர்களையும், பெரும்பாலான அரசு ஊழியர்களையும் மோசமாக பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் கொவிட் நோயை தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவுக்கும் இடையே இன்று காலை இடம்பெறவுள்ள முக்கியமான சந்திப்பைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி