தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும்! வெளியான தகவல்
Srilanka
Corona
Infection
Upul Rohana
By MKkamshan
ஒரு மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் ஏற்கனவே தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டார்.
இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இருந்தால் உடனடியாக அதனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோரினார்.
இதேவேளை, இதுவரை நான்காம் தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பான எந்தவொரு சுற்றுநிருபமோ, அறிவுறுத்தல்களோ வெளியிடப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்