காலி மறைமாவட்ட ஆயர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று
bishop
corona
galle
By Sumithiran
காலி மறைமாவட்ட ஆயர் உட்பட பத்து பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலியின் களுவேலவில் உள்ள சென் மேரி கதீட்ரல் தேவாலயத்தில் கடந்த 18 ஆம் திகதி பத்து பேருக்கு பி சி ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பத்து பேரில் ஆயர், மற்ற மூன்று பாதிரியார்கள் மற்றும் ஆறு ஊழியர்கள் தொற்றுக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயர் ஹிக்கடுவவில் அமைந்துள்ள ஹோட்டலில் உள்ள ஒரு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், மற்றயவர்கள் அனைவரும் பூசா நிபுண மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி