இலங்கையில் கடந்த 15 நாட்களில் 600 இற்கும் மேற்பட்டோரை பலியெடுத்தது கொரோனா
                    
                srilanka
            
                    
                corona
            
                    
                death
            
            
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இலங்கையில் கடந்த 15 நாட்களில் 600 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய(23 )தினத்துடனான 15 நாட்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 353 பேர் ஆண்கள் 258 பேர் பெண்கள்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்டவர்கள் 05 பேர்.30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்கள் 147 பேர். 60வயதுக்கு மேற்பட்டவர்கள் 459 பேர். வயதானவர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துச் செல்வதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தடுப்பு செயலணி வெளியிட்ட தகவலில் இதுவரை 4002 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் 13 பேர் கொவிட் முதலாவது அலையிலும் 596 பேர் இரண்டாவது அலையிலும் தற்போதைய மூன்றாவது அலையில் நேற்றுவரை 3393 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்