கொரோனா நோயாளி விடுதியிலிருந்து தப்பியோட்டம்
escape
corona patient
galle hospital
By Sumithiran
காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று தப்பிச் சென்றுள்ளதாக மருத்துவமனை பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் நேற்று அன்டிஜன் பரிசோதனை செய்தபோது குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவர் 68ஆவது விடுதியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து நேற்று இரவு 7.20 அளவில் குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.
யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவாகமத்தில் வசிக்கும் திஸாநாயக்க (30)என்பவரே தப்பிச் சென்றவராவார்.
அவரைக் கைது செய்ய யக்கலமுல்ல பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி