ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு! பேசப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
அதன்போது, பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பான்களைத் தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெறுவது குறித்தும், தூதரக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்தும் சுமுகமாக விவாதித்ததாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பிற்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உக்ரேனிய மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அமைதியை முன்னெடுத்துச் செல்லவும் இணைந்து செயல்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
போரின் முடிவு
மேலும், இந்தச் சந்திப்பின் போது பேட்ரியாட் தடுப்பு அமைப்புகளின் உற்பத்தி உரிமங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
A good meeting with President Trump @POTUS at the Oval Office. Thank you for everything we do together to protect the lives of Ukrainians and advance peace. First and foremost, I offered President Trump our condolences on the passing of Lindsey Graham. He was a true friend of… pic.twitter.com/56yoaeqb2B
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) July 28, 2026
அத்துடன், அண்மையில் மறைந்த அமெரிக்க செனட்டர் லின்ட்சே கிரஹாமின் இறுதிச்சடங்கு நடைபெறும் இந்நாளில், உக்ரைனின் உண்மையான நண்பரான அவரை இழந்ததற்காக டொனால்ட் ட்ரம்பிற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜெலென்ஸ்கி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |