எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு கிடைத்த கடுமையான தண்டனை
Sri Lanka
Kalutara
Judging
By Vasanth
பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய சந்தேகநபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நபருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்மீதான 3 குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த பண்டாரகம நீதவான் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது
கடந்த வருடம் டிசம்பர் மாதம் பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நபரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்காக சென்றபோது சுகாதார பரிசோதகர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அவர்கள் மீது வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் எச்சில் துப்பியமை குறிப்பிடத்தக்கது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்