மத்திய மாகாண கொரோனா சிகிச்சை நிலையங்களில் நிறைந்துவழியும் நோயாளிகள்!!
srilanka
covid19
corona
peoples
corona patients
By S P Thas
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து கொவிட்-19 சிகிச்சை நிலையங்களில் நோயாளிகள் நிறைந்துள்ளதாக அந்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் காரணமாக மேலதிகமாக சில சிகிச்சை நிலையங்களை ஏற்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் மத்திய மாகாணத்தில் கண்டறியப்படும் கொரோனா நோயாளியை வேறு மாகாணங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிய வைக்க நேரிட்டுள்ளதாகவும் மருத்துவர் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்