கொரோனா தொற்றாளர்கள் ,உயிரிழப்புகள் சடுதியாக அதிகரிப்பு!
corona
sri lanka
people
update
patients
By Thavathevan
நாட்டில் மேலும் 711 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 648,410ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 22,638 தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 16,287 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்
