மீண்டும் கொரோனா - பெற்றோரிடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை
By Sumithiran
கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்
இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு குடும்ப சுகாதார அலுவலகம் பெற்றோரிடம் விசேட கோரிக்கையை விடுத்துள்ளது.
நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும், மேலதிக வகுப்புகளை நடத்தாமல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளவதற்கு இடமளிக்காமல் வீட்டிலேயே பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுங்கள்
பிள்ளைகளுக்குக் காய்ச்சல், இருமல், தடிமன், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குக் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

