கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!
இந்த வருட இறுதிக்குள் 63 வீதமானோருக்கு தடுப்பு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒத்திவைப்புப் பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ரஷ்யாவின் உற்பத்தியான 13 மில்லியன் புட்னிக் மாத்திரைகளை கொள்ளவனவு செய்யவுள்ளதாகவும், அதன் ஒருகட்டமாக 15 ஆயிரம் புட்னிக் மாத்திரைகள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 13 மில்லியன் புட்னிக் மாத்திரைகளும் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கப்பெறும்.
அஸ்ரா செனிக்கா 8 தசம் 4 மில்லியன் மாத்திரைகள் எதிர்வரும் மாதங்களில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க உற்பத்தியான 5 மில்லியன் பைஸர் மாத்திரைகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு மருந்துகள் அனைத்தும் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும். தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது.
நாட்டு மக்களில் 63 வீதமானோருக்கு இந்த வருட இறுதிக்குள் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.