உலகிலேயே முதன்முறையாக அனுமதி அளித்தது பிரிட்டன்
uk
corona-tablets
grant-permission
By Sumithiran
உலகிலேயே முதன் முறையாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி அச்சத்தால் சிலர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அதற்கு தீர்வு காணும் விதமாக, மெர்க் மற்றும் ரிட்ஜ்பாக் பையோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிரவிர் மருந்தால் தயாரிக்கப்பட்ட மாத்திரையை உருவாக்கி உள்ளன.
பிரிட்டன் அரசு அங்கீகரித்துள்ள இந்த மாத்திரை அங்கு லேஜ்விரியோ என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.
பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டாலோ அல்லது கொரோனா அறிகுறிகள் தென்பட்டு 5 நாட்களுக்கு உள்ளாகவோ இந்த மாத்திரையை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.