முதன் முறையாக மூடப்படும் நாட்டின் வான் பரப்பு...!
இலங்கையின் (Srilanka) வான் பரப்பு முதன் முறையாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி மூடப்படவுள்ளது.
எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் (Elon Musk's SpaceX ) நிறுவனத்தின் எவ்.ஆர். ஏ. எம். - 2 மிஷனுக்காகவே சில மணி நேரம் நாட்டின் வான் பரப்பு மூடப்படுகிறது.
வான் பரப்பு மூடப்படுவதால் மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான பயணங்களில் எந்தத் தடங்கலும் அல்லது மாற்றமும் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு
எனினும் கிழக்கு திசை நாடுகளான சிங்கப்பூர், பாங்கொக், பீஜிங், அவுஸ்திரேலிய ஆகியவற்றுக்கான விமான பயணங்களுக்கான நேரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும், ஸ்டார்லிங்க் இணைய சேவையைப் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேற்பார்வை செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், பயனர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் செயன்முறையை சீராக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
