நாட்டின் பொருளாதாரம் உறுதி நிலையை அடைந்துள்ளது : செஹான் சேமசிங்க
நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக ஜி-24 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனில் (Washington) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் (World Bank) வசந்த கால கூட்டத்தின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதனை நிவர்த்திக்க கணிசமான நிதி சீர்திருத்தங்கள், பணவியல் கொள்கையை சரிசெய்தல், நிதித்துறையை உறுதிப்படுத்தல், கடன் மறுசீரமைப்பு மற்றும் நலன்புரி சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ள நிலையில் ஏற்றுமதி, சேவைகள் உட்பட்ட கடன் அல்லாத புதிய வளர்ச்சிப் பாதைக்கு பொருளாதாரத்தை மாற்றும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |