அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமாகிய புலம்பெயர்ந்தோர்! நியுயோர்க் மேடையில் அநுர வெளிப்படை

Anura Kumara Dissanayaka National People's Power - NPP NPP Government
By Kanooshiya Sep 26, 2025 04:51 AM GMT
Report

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கு எதிர்வரும் ஆண்டில் திரும்பக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அநுர குமார கூறியுள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உக்ரைன் தாக்குதலின் எதிரொலி: எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா திடீர் தடை

உக்ரைன் தாக்குதலின் எதிரொலி: எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா திடீர் தடை

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, "வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அவர்கள் நிதி உதவி செய்தனர். அந்த பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது.

2019 தேர்தலில் சுமார் 3 வீத வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள். எனினும், 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற ஆசனங்களை வென்று வெற்றி பெற முடிந்தது.

அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமாகிய புலம்பெயர்ந்தோர்! நியுயோர்க் மேடையில் அநுர வெளிப்படை | Country Will Return 2019 Anura Newyork

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய இலங்கை, கடன்களை செலுத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து எமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களை இலங்கை மக்கள் முதல் முறையாக வெளியேற்றினர்.

பதவி விலக தயார்: ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

பதவி விலக தயார்: ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

அரசாங்கத்தின் சவால்

எங்களுக்கு இருந்த சவால்களில் ஒன்று பொருளாதார நெருக்கடியைத் தணிப்பது. மற்றொன்று இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது.

பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம். அனைத்து சர்வதேச அமைப்புகளும், மதிப்பீட்டு நிறுவனங்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும், இலங்கை ஒரு நெருக்கடியின் போது விரைவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஒரு நாடாக இருந்ததாக அறிக்கைகளை வழங்கியுள்ளன.

அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமாகிய புலம்பெயர்ந்தோர்! நியுயோர்க் மேடையில் அநுர வெளிப்படை | Country Will Return 2019 Anura Newyork

ஒரு பொருளாதாரம் இப்படி சரிந்தால், ஒரு நாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிபுணர்கள் கருத்துப்படி, 2022 ஆம் ஆண்டில் நாடு சரிந்திருந்தால், முந்தைய நிலைக்குத் திரும்ப 2032 ஆகும்.

எனினும், நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கு முன்பு 2019 இல் இருந்த பொருளாதாரத்தை எதிர்வரும் ஆண்டில் நாம் அடைய முடியும் என நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

யாழ். மக்களே அவதானம் - நாவலர் வீதி பாபா ஆலயத்தில் நின்ற மோட்டார் சைக்கிளில் நூதன திருட்டு

யாழ். மக்களே அவதானம் - நாவலர் வீதி பாபா ஆலயத்தில் நின்ற மோட்டார் சைக்கிளில் நூதன திருட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி