உக்ரைன் தாக்குதலின் எதிரொலி: எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா திடீர் தடை
கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா (Russia) திடீர் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் (Ukraine) நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கின்றது.
எண்ணெய்
இந்தநிலையில் அண்மையில், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்பு தளங்கள் மீது உக்ரைன், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள், பாஷ்கோர்டோஸ்டான் மற்றும் பிற பகுதிகளில் உள்ள முக்கிய எண்ணெய் தளங்களை சேதப்படுத்தியுள்ளது.
இதனால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
டீசலுக்கு தட்டுப்பாடு
இதையடுத்து, நாடு முழுதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து இவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய கிரீமியா உட்பட பல பிராந்தியங்களில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உள்நாட்டு தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பெட்ரோலிய பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதிப்பதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
