மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை நட்சத்திரம்
Kumar Sangakkara
Rajasthan Royals
By Sumithiran
ராகுல் ராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்து விலகிய பிறகு, இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்காரா ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்கவுள்ளார்.
2021 முதல் அந்த அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக இருக்கும் சங்கக்காரா, ராவிட் வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப உள்ளா.மேலும் 2026 சீசனுக்கான திட்டமிடலை ஏற்கனவே தொடங்கியுள்ளார்.
நான்குமுறை முன்னேறிய அணி
2021 இல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து, சங்கக்காரா தலைமை பயிற்சியாளராக இருமடங்காக உயர்ந்துள்ளார்.
மேலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி அவரது மேற்பார்வையின் கீழ் நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளே ஒஃப் சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
