கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம்: தயார் நிலையில் இராணுவத்தினர்
புதிய இணைப்பு
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
சமூக ஊடகங்கள் மற்றும் பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றில் கோரிக்கை
ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் செயலகம், செரமிக் சந்தி, NSA சுற்றுவட்டம் வரையும், அங்கிருந்து பாலதக்ச மாவத்தைக்குள்ளும் ஆர்ப்பாட்டகார்கள் செல்வதை தடுக்கும் விதமாக கோட்டை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
இதற்கமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்ம தேரர், துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக்க முனசிங்க, தென்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.