எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு - நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
court
explosion
gas cylinder
By Sumithiran
வீடுகளில் எரிவாயு சிலிண்டர்களில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து சேதமடைந்த நிலையில் அவற்றை உரிய நிறுவனங்களுக்கு மீள வழங்கும் வகையில் நுகர்வோருக்கு அறிவிப்பதற்காக இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு (CAA) மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட சேதமடைந்த வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்காக இந்த விளம்பரங்களை வெளியிடுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன் மற்றும் ருவான் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
