நிலக்கரி இறக்குமதி நட்டத்தை மக்கள் மீது சுமத்த வேண்டாம்: மனுவை மீளப்பெறத் தயார்
Sri Lanka
Law and Order
Court of Appeal of Sri Lanka
By Pavi
அண்மையில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் ஏற்பட்ட நட்டத்தை மின்சாரப் பாவனையாளர்கள் மீது சுமத்தமாட்டோம் என உறுதியளிக்கப்பட்டால், அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மீளப்பெறத் தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை இன்று (10.11.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை மின்சாரப் பாவனையாளர்கள் மீது சுமத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொடவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி நுவன் போபகே
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் முன்னிலையானபோது சட்டத்தரணி நுவன் போபகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி