சரம் திருடனுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
sri lanka
people
court
By Shalini
காலி - இமதுவ நகரில் புடவை கடையொன்றில் 21,000 ரூபாய் பெறுமதியுடைய 12 சரங்களை திருடிய சம்பவத்தில், சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்று நேற்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் கடந்த சிங்கள தமிழ் புத்தாண்டின் போது துணி வாங்கும் போர்வையில் கடையொன்றுக்குள் சென்று 12 சரங்களையும் எடுத்துள்ளார்.
பின்னர் உடைமாற்றும் அறைக்கு சென்று அனைத்து சரங்களையும் தமது கால்களில் கட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், குறித்த கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி