பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Batticaloa Pillayan Law and Order
By Bavan Oct 13, 2026 11:25 AM GMT
Report

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய (13) வழக்கு விசாரணையின் போது பிள்ளையான் காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு கல்லடி பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தமை மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட பின்னர் உயிரிழந்தமை உள்ளிட்ட ஐந்து சம்பவங்கள் தொடர்பில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழில் கோர விபத்து : இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி!

யாழில் கோர விபத்து : இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி!

 பயங்கரவாதத் தடைச் சட்டம்

இச்சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Court Order 3 Including Pillayan Remanded Again

பின்னர், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் எனக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக 2026ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இன்றைய விசாரணையின்போது, முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், பிள்ளையான் காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Court Order 3 Including Pillayan Remanded Again

இதன்போது, மூவரையும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இலண்டனில் வசிப்பதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேகநபரான முகமட் பாய்ஸ் என்பவருக்கு எதிராகத் தொடர்ந்து பிடியாணையும் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026