காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் தொடர்பான மனு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Court order Vasantha Karannagoda Youths missing
By MKkamshan Dec 08, 2021 11:21 AM GMT
Report

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக வாதங்களை முன்வைக்க, காணாமல் போன 11 இளைஞர்களின் பெற்றோருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியதாக குற்றம் சுமத்தி, தனக்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை இடை நிறுத்தி இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு எதிராக வாதங்களை முன்வைக்கவே மேன்முறையீட்டு நீதிமன்றம் காணாமல் போன இளைஞர்களின் பெற்றோருக்கு இன்று அனுமதி வழங்கியது.

கரன்னாகொடவின் மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போபகேவின் வாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது. மனு சம்பந்தமான எதிர்த்தரப்பு வாதங்களை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோபித ராஜகருண மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்களை கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்தி தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கரன்னாகொட மனு தாக்கல் செய்துள்ளதுடன் அதில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ரீட் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள தரப்புக்கு அறிவிப்பாணை அனுப்புமாறும், கரன்னாகொட தனது மனுவில் கோரியிருந்தார்.

11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை அல்லது கொலை செய்யப்பட்டமை சம்பந்தமான விசேட மேல் நீதிமன்றம், முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை இடைநிறுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.

அன்றைய மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், சோபித ராஜகருண ஆகியோர் இந்த தடையுத்தரவை பிறப்பித்திருந்தனர்.வசந்த கரன்னாகொட தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த தடையுத்தரவு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கரன்னாகொட சார்பில் அரசதலைவர் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோர் முன்னிலையாகினர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நெரின் புள்ளே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகினார். இந்த மனு மீதான விசாரணைகளை நீதியரசர்கள் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர். 

ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia, India, வவுனியா, சிங்கப்பூர், Singapore, மலேசியா, Malaysia

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015