கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) படுகொலைச் சம்பவத்தில் கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்ளுக்கும் தொடர் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் திகதி வரை குறித்த சந்தேக நபர்களை தொடர் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றவியல் பிரிவில் பொறுப்பிலிருந்த சந்தேகநபர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணைகள்
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சம்பவம் குறித்த தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
