கெஹலியவின் பிணை தொடர்பான வழக்கு! நீதிமன்றத்தின் உத்தரவு
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பது தொடர்பிலான தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மனு தொடர்பிலான வழக்கு இன்று (25) நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்பை ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீண்ட விசாரணை
கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த சீராய்வு மனுவை ஆராய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விசாரணையின் போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பதற்கான தாக்கல் செய்த சீராய்வு மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், தமது அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.
இதற்கமைய, நீண்ட விசாரணையின் பின் இது தொடர்பிலான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சுஜீவ நிஷங்க அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |