அரச ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபா சம்பள உயர்வு..! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
அரச சேவையின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை உயர் பெறுமதியால் அதிகரிக்க முடியுமானால் அரச ஊழியர்களின் சம்பளத்தை மாத்திரம் ஏன் அதிகரிக்க முடியாது என அந்த சங்கம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
முழு பொது சேவையிலுள்ள பதின் மூன்றாயிரம் நிர்வாக தர அதிகாரிகளுக்கு பதினைந்தாயிரம் ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு பொது நிர்வாக அமைச்சு அமைச்சரவைக்கு அனுமதி வழங்கியிருந்தது.
சம்பள அதிகரிப்பு
இதன்படி, 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்ட போதிலும், அரசிடம் பணம் இல்லை எனக் கூறி அது இரத்து செய்யப்பட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே தற்போது மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புடன், அரச சேவையின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |