96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து மெக்சிகோ படைத்த வரலாறு! தென்கொரியாவுக்கு முதல் வெற்றி
கால்பந்து உலகக் கோப்பையில் மெக்சிகோ அணி 96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து தான் விளையாடிய முதல் போட்டியிலேயே முதல்முறையாக வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
நடப்பு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் மெக்சிகோவில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டியில் மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை 2-0 என வீழ்த்தியது.
இந்தத் தொடக்கப் போட்டியிலேயே சாதனையாக 3 ரெட் கார்டுகளை நடுவர்கள் கொடுத்ததும் பரபரப்பானது.
தென்கொரியா வெற்றி
மற்றொரு போட்டியில் செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியா வீழ்த்தியது.

சம பலத்துடன் மோதிய இரு அணிகளும் முதல் பாதியில் எந்த கோலையும் அடிக்கவில்லை. 2வது பாதியில் தான் ஆட்டம் சூடுபிடித்தது.
போட்டியின் 59வது நிமிடத்தில் செக் குடியரசின் லடிஸ்லெவ் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதையடுத்து, 67வது மற்றும் 80வது நிமிடங்களில் தென் கொரியா வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இறுதியில் 2-1 என்ற கணக்கில் தென்கொரியா வெற்றி பெற்றது.
எதிர்பார்ப்பு மிக்க மெக்சிகோ
மெக்சிகோ மற்றும் தென்னாபிர்க்காவுக்கு இடையேயான நேற்றைய போட்டியின் இறுதிக் கட்டத்தில் இரு அணி வீரர்களுக்கும் “ரெட் கார்ட்“ வழங்கப்பட்டமையானது பெரும் சர்ச்கைளை உறுவிக்கியுள்ளது.

இரண்டாம் பாதியில் தெ.ஆ. வீரர் சிதோலேவுக்கு 50ஆவது நிமிடத்திலும் தெம்பா ஜ்வானேவுக்கு 84ஆவது நிமிடத்திலும் “ரெட் கார்டு“ வழங்கப்பட்டது.
மேலும், மெக்சிகோ வீரர் சீசர் மோன்டெஸ் 90+2ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது
மெக்சிகோ அணி 1930 முதல் கால்பந்து தொடர்களில் விளையாடி வருகிறது. இதுவரை 16 உலகக் கோப்பையில் விளையாடியிய அந்த அணி 1974, 1982 ஆம் ஆண்டுகளில் தேர்வாகாவில்லை.
உலக கோப்பையில் பங்கேற்க தடை
மேலும் மெக்சிகோ அணி 1990ல் உலக கோப்பையில் பங்கேற்க தடை செய்யப்பட்டது.

1930ல் பிரான்ஸ் அணி மெக்சிகோவை 4-1 என வீழ்த்தியது. அதுமுதல் தனது உலகக் கோப்பையில் முதல் போட்டியில் மெக்சிகோ அணி வென்றதே கிடையாது.
இந்த அணி இரண்டு முறை (1970, 1986) காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில், தனது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இதுநாள் வரைக்கும் இருந்த முதல் போட்டியில் தோல்வி என்ற சாபத்தை முறியடித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |