கைதை தடுக்கக் கோரி கோட்டாபய தாக்கல் செய்த ரிட் மனு : நீதிமன்றின் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்திருந்தார்.
குறித்த மனு மீதான தனது பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில் மனுவை மேற்கொண்டு விசாரிக்க அனுமதி வழங்குவது குறித்த தனது தீர்ப்பு செப்டெம்பர் 22 அன்று வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மேலும், இவ்வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஓகஸ்ட் 31-ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது அன்றோ தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனு கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |