அரிசி லொறி கொள்ளை சம்பவம்:சம்பத் மனம்பேரிக்கு வழக்கில் இன்று தீர்ப்பு
முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (13) வழங்கப்பட வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றியபோது, நாரஹேன்பிட்ட சந்திப்பு அருகே ஒரு தொழிலதிபரை மிரட்டி, அவரிடமிருந்து அரிசி லொறி ஒன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இம்மாதம் 03ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெலவின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காவல்துறையினர் போல் வேடம்
கிழக்கு மாகாணத்திலிருந்து அரிசியை ஏற்றிச் சென்ற தொழிலதிபரிடம் 2009ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12ஆம் திகதி நடந்த கொள்ளை உட்பட ஏழு குற்றச்சாட்டுகளின் பேரில், சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தின்போது பிரதிவாதிகள் காவல்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டிருந்தனர். இவ்வழக்கு இன்று (13) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |