வெளிநாட்டிலிருந்து ஆட்டம்காட்டும் பாதாள உலக குழு சகோதரர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வெளிநாட்டில் ஒளிந்துகொண்டு நாட்டில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாகக் கூறப்படும் தெவுந்தரவைச் சேர்ந்த செஹான் சத்சாரா என்ற 'தெஹிபலே மல்லி' மற்றும் அவரது சகோதரர் துஷான் நெத்சாரா என்ற 'களு மல்லி' ஆகியோரை உடனடியாகக் கைது செய்து முற்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.
மேலும், இந்த சந்தேக நபர்களுக்கு பயணத் தடை விதிக்கவும் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
தெற்கு கடலில் மிதந்த போதைப்பொருள்
தெற்கு கடலில் மிதந்து கொண்டிருந்த 839.254 கிலோகிராம் ஐஸ், ஹெரோயின் மற்றும் ஹாஷிஷ் ஆகிய போதைப்பொருட்களை கடற்படை சமீபத்தில் பறிமுதல் செய்தது.
தெஹிபலே மல்லி மற்றும் கலு மல்லி ஆகியோரால் இந்த போதைப்பொருள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சந்தேக நபர்கள் துபாயிலோ அல்லது வேறு வெளிநாட்டிலோ ஒளிந்து இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் விடுத்த கோரிக்கை
இரண்டு நபர்களின் தொலைபேசி பதிவுகளை வரவழைக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் காவல்துறையினர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து கடற்றொழிலார்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதன்படி, தொடர்புடைய சந்தேக நபர்களை நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
