மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு

Sri Lankan Tamils Batticaloa
By Vanan Nov 13, 2023 11:38 PM GMT
Report

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை வெளியேற்றக் கோரி அந்தப் பகுதி கால்நடை பண்ணையாளர்கள் 60 ஆவது நாளாகவும் போராட்டத்தை தொடரும் நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பிற்கான விசாரணை

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே..! (காணொளி)

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே..! (காணொளி)

மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு | Court Orders Eviction Of Mayilathamadu Invaders

இறுதியாக கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற இந்த வழக்கு, தீர்ப்பிற்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

மகாவலி அதிகார சபை சார்பாக அரச தரப்பு சட்டத்தரணி டில்கானி டி சில்வா மன்றில் முன்னியாகியிருந்தார்.

இதன்போது அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களால் அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் காணி அனுமதி தொடர்பான எந்த வகையான ஆவணமும் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிவான் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய பிரதிவாதிகளான 13 பேரையும் வெளியேறுமாறு நீதவான் அன்வர் சதாத் கட்டளையாக்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

ரணிலின் உத்தரவு

ஏற்கனவே மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டமை தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த மாதம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு | Court Orders Eviction Of Mayilathamadu Invaders

இதன்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறியிருந்த நிலையில், இன்று அத்துமீறி குடியேறியுள்ளவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தூபியுடன் தொடர்புபடுத்தி விசமப் பிரசாரம் : குற்றச்சாட்டை மறுக்கும் பேராசிரியர்

முள்ளிவாய்க்கால் தூபியுடன் தொடர்புபடுத்தி விசமப் பிரசாரம் : குற்றச்சாட்டை மறுக்கும் பேராசிரியர்

தீர்ப்பின் நடைமுறைச் சாத்தியம்

இதேவேளை, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் பிறப்பித்த கட்டளையை உரிய தரப்பினர்கள் நடைமுறைப்படுத்துவார்களா என பொத்துவில் - பொலிக்கண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கேள்வி எழுப்பினார்.

மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு | Court Orders Eviction Of Mayilathamadu Invaders

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள வேலன் சுவாமிகள், ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேறுமாறு தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அந்தத் தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை இழுத்தடிப்பு செய்வதற்காக மகாவலி அதிகார சபையும் வனவளத் திணைக்களமும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்கள் எனவும் வேலன் சுவாமிகள் கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016