சி.ஐ.டி.யின் கோரிக்கையை முற்றாக நிராகரித்தது நீதிமன்றம்
நாட்டில் எரிபொருள் நிலைமை தொடர்பாக கருத்து வெளியிட்டு சிஐடியால் கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதி ஆனந்த பாலிதவுக்கு கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
குற்றவாளிக்கு பிணை வழங்கக்கூடாது என்றும், அவருக்கு பிணை வழங்கப்பட்டால், அவர் மீண்டும் மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிடலாம் என்றும் சிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அரசியலமைப்பின் பிரிவு 14 (1) ன் கீழ் நாட்டு மக்களுக்கு பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதால், உண்மைத் தகவல்களின் அடிப்படையில் கருத்து தெரிவிப்பது என்பது விளக்கமறியலில் வைக்க வேண்டிய விடயமல்ல என்று கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் லோசனி அபேவிக்ரம சிஐடிக்கு சுட்டிக்காட்டினார்.
சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா, நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாக பெற்ரோலியத்துறை அமைச்சர் உதய கம்மன்பில கூறியதாகவும், உண்மைகளின் அடிப்படையில் ஆனந்த பாலித இவ்வாறு கூறியது தவறல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கு செப்ரெம்பர் 29 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.