2009 இல் சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய தேரர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dhilak May 27, 2026 04:24 PM GMT
Report

2009ஆம் ஆண்டில் சிறுவன் ஒருவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில், பௌத்தத் தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, குற்றம் சாட்டப்பட்டவரான வணக்கத்திற்குரிய உடுவில சுஜாதா என்ற தேரர், 2023 ஓகஸ்டில் பலப்பிட்டிய உயர் நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனைக்கு எதிராக இந்த மேல்முறையீட்டைச் செய்திருந்தார்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் விகாரையில் தங்கியிருந்த ஒன்பது வயது சிறுவனைப் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக இந்தத் தேரர் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டார்.

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் பொய் உரைக்கும் அமைச்சர்! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் பொய் உரைக்கும் அமைச்சர்! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்

10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

அப்போது உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 200,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தது.

2009 இல் சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய தேரர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Court Upheld 10 Year Prison Imposed On A Monk

2009ஆம் ஆண்டில் விகாரையினுள் உள்ள தேரரின் அறைக்குள் இந்தத் துஷ்பிரயோகம் நடந்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் சாட்சியமளித்திருந்ததை மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் பின்னர் இது குறித்துத் தனது உறவினர் ஒருவரிடம் தெரிவிக்கவே, காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் சாட்சியம்

பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த விபரங்களுடன் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் ஒத்துப்போவதாக நீதித்துறை மருத்துவ அதிகாரி (JMO) வழங்கிய மருத்துவச் சான்றுகளையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

2009 இல் சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய தேரர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Court Upheld 10 Year Prison Imposed On A Monk

இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதி தரப்பால் சுட்டிக்காட்டப்பட்ட முரண்பாடுகள் அரசுத் தரப்பு வழக்கை வலுவிழக்கச் செய்வதற்குப் போதுமானதாக இல்லை என்றும், விசாரணை நீதிபதி பாதிக்கப்பட்ட சிறுவனின் சாட்சியத்தை உண்மையென ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் அவதானித்துள்ளது.

இதற்கமைய, குற்றவாளியான தேரரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பலப்பிட்டிய உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்துள்ளது.

இரு சிறுநீரகங்களும் செயலிழப்பு! தமிழ் மக்களின் உதவியை நாடி நிற்கும் முன்னாள் போராளி

இரு சிறுநீரகங்களும் செயலிழப்பு! தமிழ் மக்களின் உதவியை நாடி நிற்கும் முன்னாள் போராளி

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு! முற்றாக நிராகரித்த முஜிபுர் ரஹ்மான்

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு! முற்றாக நிராகரித்த முஜிபுர் ரஹ்மான்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026