யாழில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞனே உயிரிழந்தவனாவான். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மின் கம்பத்துடன் மோதி விபத்து
கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை
உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தற்போது சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைகள் நடைபெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 9 மணி நேரம் முன்