25 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை : ஐவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!
குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் அத்தனகல்லாவின் வெலகெதரவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று (17) இந்த தீர்ப்பை வழங்கினார்.
2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி ஒரு குழுவினர் வெலகெதர, தியகவிட்டியிலுள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது கற்கள், தடிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
கம்பஹா மேல் நீதிமன்றம்
இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சயங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்தே ஐவரும் கொலைக் குற்றம் மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் ஐந்து பேருக்கும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |