சிறையில் நித்திரையின்றி அவதிப்படும் சஷீந்திர! நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், எனவே அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ச நேற்று (19.08.2025) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த தகவல் வெளியிடப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது,சஷீந்திரவின் வழக்கறிஞர்கள், “தூக்கமின்மைக்கு மருத்துவ உதவி வழங்கப்படாவிட்டால், அவர் உயர் இரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இது மரணத்திற்கு வழிவகுக்கும்” என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
இந்த ஆண்டு அக்டோபரில் பக்கிங்ஹாம்ஷையர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு தேர்வை சஷீந்திர ராஜபக்ச எழுதவிருப்பதாகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தனது கட்சிக்காரரை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைப்பது அவர் தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், பிணை வழங்க தீர்மானிப்பதில் இதை ஒரு முக்கிய காரணியாகக் கருதுமாறு நீதி மன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி, சஷீந்திர ராஜபக்சவை ஒகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மகாவலி அதிகார சபை
இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணை தொடர்பாக ஆகஸ்ட் 06 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சஷீந்திர ராஜபக்சவை கைது செய்தது.
செவனகல, கிரிப்பன்வெவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பண்ணை கட்டிடம் ஒன்றை நிர்மாணித்ததாக சஷீந்திர ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மே 09, 2022 அன்று 'அரகலயா' போராட்டத்தின் போது இந்தக் கட்டிடம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் காணி இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
