இலங்கையில் மேலும் 14 கொவிட் மரணங்கள் பதிவு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 14 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(28) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,400ஆக அதிகரித்துள்ளது.
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளதாக இன்று(29) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 35,634,497 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்