எண்ணெய் உற்பத்தியை மூன்று மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கபோகும் ஈராக்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட கடுமையான சரிவைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குள் உற்பத்தியை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க ஈராக்கின் எண்ணெய் அமைச்சகம் செயல்பட்டு வருவதாக, மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரின் காரணமாக ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி சுமார் 60 சதவீதம் சரிந்த நிலையில், போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு நாளைக்கு 3.3 மில்லியன் பீப்பாய்களாக காணப்பட்டுள்ளது.
பல்வேறு எண்ணெய் வயல்களில் உள்ள தேக்கங்களின் நிலை மற்றும் உற்பத்தித் திறனில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி, ஏற்றுமதி முந்தைய நிலைக்குத் திரும்புவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்று அந்த நாட்டு தரப்புக்கள் விளக்கியுள்ளன.
மூன்று மில்லியன் பீப்பாய்
ஈராக்கின் தெற்குப் பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமாக இருந்த முந்தைய உற்பத்தி நிலைகளுக்கு, ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் நாம் திரும்புவது சாத்தியம் என ஈரான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஈராக் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும், மேலும் அதன் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு 145 பில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |