முல்லை - மல்லாவியில் கொரோனா மரணம் பதிவு
covid
death
mallavi
By Vanan
முல்லைத்தீவு - மல்லாவியில் வீட்டில் தனிமையில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புகழேந்தி நகர் நமளங்குளம் பகுதியில், 10 ஆம் திகதி அன்று, வீட்டில் இருந்த 47 அகவையுடைய ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவு இன்று( 12) வெளியாகியுள்ளது.
பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவரது சடலம் வவுனியா கொண்டு செல்லப்பட்டு மின்சார சுடலையில் எரியூட்டப்படவுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி