உச்சம் தொட்டது கொவிட் மரணம்!! 3,555 பேருக்கு புதிதாக தொற்று
covid
sri lanka
death
By Vanan
நாட்டில் நேற்றைய தினத்தில் (16) மாத்திரம் 171 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,434 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று (17) இதுவரையில் 3,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி