இலங்கையில் மேலும் 7 கொவிட் மரணங்கள் பதிவு
COVID-19
Vavuniya
Sri Lankan Peoples
By Vanan
நேற்று பதிவான மரணம்
இலங்கையில் மேலும் 7 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த மரணங்கள் நேற்றும் இன்றும் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் 4 ஆண்களினதும், 2 பெண்களினதும் மரணங்கள் பதிவாகின. 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஒருவரும், 60 வயதிற்கு மேற்பட்ட ஐவருமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பதிவான மரணம்
இதேவேளை, இன்று வவுனியாவில் கொவிட் தொற்றுக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 66 வயதுடைய நபர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 595 ஆக அதிகரித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி