மட்டக்களப்பு சிறைக்குள் ஊடுருவியது கொரோனா - 72 பேருக்கு தொற்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மொத்தமாக 116 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா. மயூரன் தெரிவித்துள்ளார்.
இதன் அடைப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 72 நபர்களும், மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 15 நபர்களும், களுவாஞ்சிகுடி காத்தான்குடி, ஆரையம்பதி தலா ஒரு நபரும், கோரளைப்பற்று 10 நபர்களும், செங்கலடியில் 08 பேர், ஏறாவூரில் 04 பேர், பட்டிப்பளையில் 02 பேர் என மொத்தம் 116 பேருக்கு தோற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்றைய தினம் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் அதிக தொற்றுக் காரணமாக பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.