முல்லைத்தீவிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நேற்று மாலை தொடக்கம் புதுக்குடியிருப்பு ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாசாலையில் இடம்பெற்று வருகிறது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸானது இலங்கையிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்குடன் அரசாங்கமானது பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் நாட்டு மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளும் மிக விரைவாக இடம்பெற்றுவருகிறது.
அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்படடவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாசாலையில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.





