இலங்கையில் கொரோனா தடுப்பூசி மோசடி! வைத்தியர் வெளியிட்ட செய்தி
corona
sri lanka
people
By Shalini
மோசடி செய்பவர்கள் சிலர் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள கொரோனா தடுப்பூசிகளை பணத்திற்காக வாங்குவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த மோசடிகளைப் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறுகையில்,
தடுப்பூசியை பெறுவதற்கு எந்தவொரு நபருக்கும் பணம் கொடுக்கக்கூடாது.
இதுபோன்ற மோசடிகள் தங்கள் பகுதிகளில் நடந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு சுகாதாரத் துறைத் தலைவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
தடுப்பூசிகளின் அதிக பங்குகள் எதிர்காலத்தில் பெறப்பட உள்ளன. இதனால் தடுப்பூசிகளைப் பற்றி மக்களுக்கு எந்த பயமும் இருக்கக்கூடாது என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி