உலக பணக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இலங்கை இளைஞன் -காவல்துறையின் அதிரடியில் கைது
செல்வந்த நாடுகளின் வசதி படைத்த நபர்களின் கிரடிட் கார்ட் தரவுகளை இணையத்தளம் மூலம் கண்டுபிடித்து ஒன்லைன் மூலமாக 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்துள்ள 18 வயது இளைஞர் ஒருவரை குற்றத்தடுப்பு விசாரணை கணனி பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா, ஆர்ஜென்டீனா, மெக்ஸிக்கோ, ஐக்கிய இராஜ்ஜியம் உள்ளிட்ட பல செல்வந்த நாடுகளிலுள்ள வசதி படைத்த நபர்களின் கிரடிட் கார்ட் தரவுகளை இணையத்தளம் மூலம் இனம் கண்டு 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் இந்த இளைஞர் ஒன்லைன் மூலமாக பொருட்களை கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சாதாரணதர பரீட்சையில் இரண்டு பாடங்களே சித்தி
தும்மலசூரிய பிரதேசத்தில் வசித்து வரும் மேற்படி இளைஞர் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் இரண்டு பாடங்களில் மாத்திரமே சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வறுமையான குடும்பத்திலுள்ள மேற்படி இளைஞர் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குப் பின்னர் கூலி வேலை செய்து சிறிய வருமானத்தை ஈட்டி அதன் மூலம் கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று காலத்தில் இணையத்தளம் மூலமான விளையாட்டு
கொரோனா தொற்று காலத்தில் இணையத்தளம் மூலமான விளையாட்டுக்களில் அதிக ஈடுபாட்டுடன் அவர் விளையாடியுள்ளார். அதன் மூலமே இணையத்தளம் தொடர்பான மேலதிக அறிவை அவர் பெற்றுக் கொண்டுள்ளார். அந்த விளையாட்டுகள் குழுவாக மேற்கொள்ளும் விளையாட்டுக்கள் என்பதால் அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களின் வங்கி கணக்குகளை ஹெக் செய்வது தொடர்பில் அந்த விளையாட்டில் ஈடுபடும் நபர்களின் தொடர்பாடல்களை செவிமடுத்து தரவுளை பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
இணையத்தளம் மூலம் பல்வேறு பொருட் கொள்வனவு
சந்தேக நபரது கணனியை பரிசோதனை செய்த வேளையில் அவரிடம் 05 இலட்சம் பெறுமதியான தரவு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தரவுகளை உபயோகித்து அவர் இணையத்தளம் மூலம் பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ககாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கணனி, புகைப்பட கருவிகள், பல்வேறு உணவுப் பொருட்கள், மதுபான வகைகள் உள்ளிட்ட பொருட்களை அவர் பல தடவைகளில் கொள்வனவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
