தொடரும் கிரிக்கெட் நெருக்கடி : விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி
Roshan Ranasinghe
Sri Lanka Cricket
Supreme Court of Sri Lanka
By Sumithiran
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்ட தடை உத்தரவை இரத்து செய்யுமாறு தெரிவித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்த இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானியை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 07 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமையவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையிலேயே அமைச்சர் ரொஷான் ரணசிங்க அந்த தடை உத்தரவை நீக்கக்கோரி இன்று மேன்முறையீடு செய்துள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி